பேரிடரிலிருந்து மீட்புக்காக 50 பில்லியன் ரூபா குறைநிரப்பு ஒதுக்கீட்டு முன்மொழிவு

 


திடீர் அவசர நிலை காரணமாக ஏற்பட்ட பேரிடரிலிருந்து மீளவும், தேவையான செலவுகளை மேற்கொள்ளவும் 50 பில்லியன் ரூபா குறைநிரப்பு ஒதுக்கீட்டு பிரேரணை நேற்று (03) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நேற்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை அமர்வில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 20 பில்லியன் ரூபா நிவாரண நடவடிக்கைகளுக்காகவும், 30 பில்லியன் ரூபா அபிவிருத்தி உதவித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை